General News

முதுகுளத்தூரில் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா

முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியனின் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா, முதுகுளத்தூரில் இந்தியன் ஆயில் தென் மண்டல தலைமை விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. பரமக்குடி நகர தலைவர் கீர்த்திகா குத்துவிளக்கேற்றினார்.

சாத்தூர் எம்.எல்.ஏ., உதயகுமார், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கினர்.

முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், ஒன்றிய செயலாளர்கள் தர்மர் (முதுகுளத்தூர்), அசோக்குமார் (ராமநாதபுரம்), முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், மாநில இளைஞரணி இணை செயலாளர் சதன்பிரபாகர், மாநில விவசாய அணி இணை செயலாளர் கர்ணன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் கோவிந்தராமு, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் சுதந்திரகாந்தி இருளாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்மாயக்கண்ணன் (ஓரிவயல்), அழகர்சாமி (பொதிகுளம்), மயில்வாகணன், ஓரிவயல் கிளை பாசறை தலைவர் பாஸ்கரன், சுந்தரமூர்த்தி, சங்கர், சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button