கவிதைகள் (All)
குடியரசு தின வாழ்த்துகள்

குடியரசு தின வாழ்த்துகள்
“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடு
உதித்ததும் , உ ருவானதும்,
குடியரசு நாடாய் மலந்ததும்.
கொண்டாடிட மட்டுமல்ல?

பேச்சுரிமை, எழுத்துரிமை
இல்லா நிலையில்
வெள்ளையரின். கொடுமையில்
சிறைப்பட்டோமே?
பல்லாயிரம் மக்களின்
உயிரையும், உடமைகளையும்
இழந்துதானே அடைந்தோம்!
சுதந்திரம் பெற்றோம் ?
நாட்டின் விடுதலை
வரலாற்றை இளைஞர்கள்
அறிந்திட செய்தோமா?
தியாகிகளின், தியாகத்தையும்
.மறந்து விட்டோமே?
இல்லாமை இங்கில்லை
என்ற நிலையை
உருவாக்கி விட்டோமா?
ஆண்டு தொடரும்.
விழா கொண்டாடபடும்
சுதந்திர ,குடியரசு
தினத்தில் உறுதியேற்போம்!
உழவும், தொழிலும்
உவந்து செய்வோம்!
வேலை வாய்ப்புகளை,
இளைஞர்களுக்கு,
உருவாக்குவோம்!
. உணவும் ,உறைவிடமும்
உடுத்த ஆடையும்,
அனைத்து மக்களும்,
பெறவே செயல்படுவோம்!
அகிலமே. பாராட்டும் இல்லாமை இல்லாத
இந்திய நாட்டை
வல்லரசாக்க உழைத்திடுவோம்
தஞ்சை.ந.இராமதாசு
, 9944570661