கவிதைகள் (All)

இறைவனும் குழந்தையும்!

http://jmbatcha.blogspot.com/2012/02/blog-post_25.html

குழந்தைகள்
இறைவனின் அருட்கொடை!
அவனே நமக்கு
அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு!
எல்லையில்லா மகிழ்ச்சியில்
ஆழ்த்தும் அருட்சுரப்பு!
அவனின் கருணைக்கரங்களால்
கற்ப உலகத்தில் காத்தவன்
மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற‌
பிள்ளையாய் புதிய மனிதப்பிறவியை
நம் கரங்களுக்கு அவனே சொந்தமாக்குகிறான்!
கற்பக்கோலறையின் இருட்டு வாசத்தில்
சுவர்க்க போகம் கொண்டிருந்த
மென்மையின் தாயே
சேயாய் ஸ்தூல உலகில்..!
உறுப்புக்களை அமைத்து
ஒழுங்குற வடிவம் தந்து
எழிழுடன் முழுமையக்கி
கொஞ்சமும் நேர்த்தி குறையாது
நம் மடிகளில் தாங்க கொடுக்கிகிறான்!
“நீ மட்டுமே என்னை…
வளர்த்தாய்.. அணைத்தாய்..
உயிரூட்டினாய்.. உணர்வூட்டினாய்..
அன்னையிடமிருந்தே அமுது தந்தாய்
ஏன் நீ என்னை
வெளியே கொணர்ந்து
மனிதர்களிம் கொடுக்கப்போகிறாய்
வேண்டாம் இறைவா..
உன்னிடமே இருக்கிறேன்
நீயே என்  நிகரில்லா அருந்தாய் ..! “
என்றோ என்னவோ கெஞ்சியே
அழுது கொண்டே  வருகிறது
ஆனாலும் இறைவன்
“அழாதே கண்ணே..
என் அன்பின் பகுதியைத்தான்
அன்னையிடம் ஈந்துள்ளேன்
அவள் தாய்மையை ருசி
அதில் என்னையே  நீ ரசி”
என்று சொல்லி அனுப்புகிறான்.
இது என் குழந்தை என்பதற்கோ
நான் தான் பெற்றெடுத்தது என்பதற்கோ
யாருக்கும் பெருமையடிக்க யாதுமில்லை!
இதில் ஆரம்பம் முதலே
அவனின் வல்லமை மட்டும் தான்!
அவனின் வல்லமைக்கு அவனே நிகர்
பெருமையெல்லாம் பேரிறைக்கே உரியது.
அவனின் அருமைப் படைப்பை எண்ணி
இயற்கையின் இயக்குதலை எண்ணி
பிரமித்து சரண் அடைவது  மட்டுமே
நமக்கு நன்மை பயக்கும்!
அடிமைத்துவத்தை உணர்ந்து
அதில் லயித்தால்
சங்கமம் ஏற்கப்படும்
சந்தோசம் நிலைத்து விடும்
எவ்வளவு பெரியவன் அவன்
எவ்வளவு பெரிய சக்தி அது
எவ்வளவு பெரிய உண்ணதம் இறை!

-ஜே.எம்.பாட்ஷா

(கடந்த டிசம்பர் மாதம் 2011 என் மகள் பிறந்த போது எழுதிய பல கவிதைகளில் இதுவும் ஒன்று)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button