வாழ்வில் வியாதிகளும் உணவு முறைகளும்
கற்கால மனிதர்கள் முதல் தற்கால மனிதர்கள் வரை வாழ்வியல் மாற்றங்களாலும் நாகரீக உணவு முறை பழக்கங்களாலும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி நாட்டிற்கும் வீட்டிற்கும் சுமையாக மாறுகின்ற காலத்தில் நாம் அனைவரும் வாழ்கின்றோம.; உலகின் சர்க்கரை வியாதியின் தலைநகரமாக இன்று இந்தியா இருக்கின்றது. இதயநோய், இரத்தக் கொதிப்பு, சிறுநீரக நோய்கள், மாரடைப்பு, வாத நோய்கள், ஈரல் நோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் இவைகளுக்கு மத்தியில் மனிதன் மதுபான பழக்கமும் புகையிலை பொருட்கள் மற்றும் பீடா போன்ற தேவையற்ற பழக்கங்களால் தன் ஆரோக்கியத்தை தானே கெடுக்கும் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அறிவியல் முன்னேற்றங்களால் மனிதனுக்கு கிடைத்துள்ள தொலைபேசிகள், தொலைக்கட்சி பெட்டிகள் போன்ற சாதனங்கள் அவன் தூக்கத்தைக் ஒருபுறம் கெடுத்துக் கொண்டிருக்க துரித உணவகங்கள் (குயளவ குழழன) என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிற புதிய கலாச்சாரம் மனிதனின் ஆரோக்கியத்தையும் உணவு முறைகளையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களால் மனிதனின் உடல் நலமும் மன நலமும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை விஞ்ஞானிகள் விரைவில் ஆராய்ச்சிகள் மூலம் நிருபிக்க இருக்கிறார்கள். இந்த முறைகள் மனிதனுக்கு வரப்பிரசாதமா அல்லது சாபக்கேடா (டீழழn ழச டீயn) என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.
இன்றைய இயந்திரமயமான உலகில் மனிதன் தன்னுடைய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை 16 வயது முதல் ஒழுங்குபடுத்த ஆரம்பித்தால் நாம் மேற்கூறிய நோய்களிலிருந்து 50 மூ விடுதலை பெற முடியும் என்ற நோக்கத்தில் இந்த அட்டவணையைத் தயாரித்துள்ளோம்.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மட்டும்தான் உணவு அட்டவணை தேவை என்று நினைக்க வேண்டாம். ஓவ்வொரு மனிதனுக்கும் உணவே முதல் மருந்தாகும். தரமான உணவை சரியான நேரத்தில் சரியான அளவில் கணக்கிட்டு உண்ண வேண்டும். இதற்கு முதல் தேவை தனக்கு சரியான உடல் எடையுள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் உடல் எடையை எப்படிக் கணக்கிடுவது என்றால்
ஒருவருடைய உயரம் 160 சென்டிமீட்டர் என்று வைத்துக் கொண்டால் அதிலிருந்து 100 ஐக் கழித்து விட வேண்டும்.
உதாரணமாக : 160 செ.மீ – 100 ஸ்ரீ 60 கிலோகிராம்.
பின்பு கலோரி கணக்கை எப்படி கணக்கிடுவது என்றால் 1 கிலோவுக்கு 25 ஐ கலோரியால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக : 60 கிலோ ஓ 25 ஸ்ரீ 1500 கலோரி.
இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 2500 கலோரி உணவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
அதிக வேலைப்பளு உள்ளவர்கள் 3000 கலோரி உணவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
50 வயதை தாண்டியவர்கள் சுமார் 2000 கலோரி உணவையும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1800 கலோரி உணவையும் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கiரை வியாதி இதயநோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு மூன்று சத்துக்களையும் பாதியளவு தினசரி குறைத்துக் கொள்வது நல்லது. அல்சர் எனப்படும் குடல்புண் நோய் உள்ளவர்கள் உணவில் காரத்தைக்குறைத்துக் கொள்வது நல்லது,
இவை அனைத்தையும் விட தினசரி வாழ்க்கையில் மனஅழுத்தத்தையும் கவலையையும் குறைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஓவ்வொரு நாளும் மனிதன் ஆரோக்கியமாக இருக்க மூன்று விதிகளை பின்பற்ற வேண்டும்.
1. தினசரி 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி.
(காலை 4 கிலோமீட்டர் மாலை 4 கிலோமீட்டர். கால அளவு அரைமணிநேரம்) மற்றும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு இதன் மூலம் கிடைக்கிறது.
2. தினசரி 8 டம்ளர் (ஒரு டம்ளர் அளவு 300 அட) சுத்தமான குடிநீரை தினசரி உட்க்கொள்வதால் இதயத்தின் இரத்த ஓட்டமும் சிறுநீரகத்தின் உடல்கழிவுகளை அகற்றும் பணியும் நன்றாக செயல்படுகிறது.
(இரத்தம் நன்றாக சுத்தீகரிக்கப்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள அனைத்து கழிவுப் பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன.
3. தினசரி வாழ்வில் 8 மணிநேர தூக்கம் மனிதனின் மூளைக்கு நல்ல ஓய்வினையும் நல்லது கெட்டதுகளை தீர்மானிக்கும் நல்ல புத்திக் கூர்மையையும் மூளையின் செயல்படும் திறனையும் கூட்டுகிறது. தூக்கமும் ஒரு அருமருந்தாகும். மகிழ்ச்சியான ஆரோக்கியமான மனநிலை உடல் நிலை பாதுகாக்கப்படுகிறது.
இதற்காக உங்கள் தினசரி வாழ்க்கையில் என்ன உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதை ஒரு ஆரோக்கிய பாடத்திட்டமாக வழிகாட்டும் முறையாக ஒரு அட்டவணையைத் தந்துள்ளோம். உங்கள் குடும்ப டாக்டர்களின் ஆலோசனையையும் பெற்று திட்டமிட்டு உட்க்கொண்டு நூறாண்டுகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்.
Dr. A. Ameer Jahan
Ameer Speciality Clinic,
“Crescent Court”
963, Poonamallee High Road,
Chennai – 600 084.
Tel/Fax: (044) 2661 4485, 2532 2021,
Mob: + 91 938005652