கட்டுரைகள்
எழுத்தாளர்களது குறிப்புகள் சேகரிப்பு
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த செப்டம்பர் /அக்டோபர் முப்பது ஒன்றாம் இரண்டாம் தேதிகளில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை சார்பாக நடத்தப்பட்ட பயிலரங்கம் மற்றும் மாநாடு மிகச் சிறப்பாக இருந்தது. அது பற்றிய செய்திகள் புகைப் படங்களோடு வரும்.
அதில் முக்கியமாக ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது. முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள்,சிறுகதை, நாவல் எழுத்தாளர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஒரு சிறு கையேடாக வெளிட வேண்டும் என்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் விருப்பப் பட்டார்கள். அந்தப் பொறுப்பை சிறுகதை செல்வரும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட டாக்டர் ஹிமானா செய்யத் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். கடல் கடந்து வாழும் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் தங்களைப் பற்றிய குறிப்புக்களை himanasyed@gmail.com
என்ற முகவரிக்கோ அல்லது எனது முகவரிக்கோ அனுப்பித்தர அன்புடன் வேண்டுகிறேன். இருட்டுக்குள் இருக்கும் உங்கள் பெயரும் ஆக்கங்களும் வெளிச்சத்துக்கு வர உதவுங்கள்.
அன்புடன்
பீ. எம் . கமால்