கவிதைகள் (All)
புனித ரமலான் வருக! வருகவே!!
அருமறையின் அடிச்சுவட்டில்
அகமெங்கும் அர்ப்பணித்து
ஆண்டவனின் தாள்பணிந்து
அகிலத்தோர் வாழ்தலெனும்
பெருமைமிகு நபிகளவர்
செப்பிய வழிநடக்கும்
முகமதியர் கடைப்பிடிக்கும்
முப்பதுநாள் விரதமன்றோ?
தருவதிலே உள்ள இன்பம்
தரணியெங்கும் தான் பரவ
ஈதல்செய்து உவக்கும்
இஸ்லாமிய மார்க்கமதில்
நோன்பதன் மாண்பதனை
முப்பது நாட்கள் கண்டு
ஊன் உயிர் யாவையும்
ஒன்றெனப் போற்றிடும்
ஆன்மீகப் பாதையில்
ஆண்டவன் அருள்பெறவே
ஓங்கிய வழி நடக்கும்
உத்தமர்கள் வாழியவே!
புனிதமெனக் கருதப்படும்
ரமலானே வருக! வருக!!
மனிதரெலாம் இணைந்து வாழ
மறையோனின் அருள்பொழிக!!
அன்புடன்
காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்) (இத்துடன் இணைப்புகளையும் காண்க)
01.08.2011
தற்போது – ருவைஸ், அபுதாபி..
00971 50 2519693
kmaindhan@gmail.com