ரஹ்மானியா எத்தீம்கானா
ஏழை, எளிய மாணவர்கள் படித்து, ஓதி பயன் அடையும் வகையில் முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானா என்ற சிறுவர் பராமரிப்பு இல்லம் சிறப்பாக செயல் ஆற்றிவருகிறது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேசிய விருது வழங்கப்பட்ட நல்லாசிரியமான டாக்டர் ஹாஜி. எஸ். அப்துல் காதர் எம்.ஏ., பி.எட்., டி.லிட் அவர்கள் இதன் நிர்வாகியாகவும், மவ்லவி ஹாஜி எஸ். ஏ. பஷீர் சேட் ஆலிம் ஹஜ்ரத் அவர்கள் இதன் மேற்பார்வையாலராகவும் பொறுப்பேற்று சேவை செய்து வருகின்றார்கள்.
இங்கு 6,7,8,9 வகுப்புகளில் மாணவர்களைச் சேர்த்து பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்து 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய பயிற்சி அளிப்பதுடன் கம்ப்யூட்டர் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மேலும் காலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குர்ஆன் ஓதிக்கொடுத்து மார்க்கக்கல்வி போதிக்க வசதி செய்யப்பட்டிருக்கின்றது. ஐந்து நேர தொழுகை கடைப்பிடிக்கப்படுகின்றது.
இங்கு சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், பள்ளிக்கட்டணம், பாடபுத்தகங்கள் ஆகிய அனைத்து தேவைகளும் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகின்றன.
சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் ஜும் மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகின்றது.
சேர்ந்து பயன்பெற விரும்புவோர் தபால் எழுதி பெயரை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிர்வாகி
ரஹ்மானியா எத்தீம்கானா
10 ஆசாரி தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்