கவிதைகள் (All)

எங்கே சமத்துவம்…!

அழகிய நகரம்!
அதில்…
நவீன முறை குடியிருப்புகள்..!

ஆங்காங்கே…

வெள்ளிக் கலசம்
விண்ணை தொட
கோவிலின் கோபுரங்களும்…

வானத்தை
முட்டி நிற்கும்
பள்ளி வாசலின்
மினாராக்களும்…

சிலுவையை சுமந்த படி
கிருத்துவ
தேவாலயங்களும்…!

சமத்துவ இந்தியாவின்
தனித்துவம்
சிந்தித்து வியந்து நிற்கையில்…
திடீறென கூக்குறலும்.. ஓலங்களும்..
கூடவே
வெடிச் சத்தமும்…!

ஆரவாரம்
கேட்டதில்
இறை இல்லங்களினின்றும்
பட படத்தபடி
வெளிப்பட்டு
“ஒன்று கூடி”
வானத்தை வட்டமிடும்
வென் புறாக்கள்..!

மனக்கலவரம்
அடைந்த நானும்
விசாரிக்கையில் சொன்னார்கள்…

”அங்கே…
மனிதர்களுக்குள்
ஏதோ மதக் கலவரமாம்!”

உள்ள குடியிருப்புகள்
அப்படியே இருக்கட்டும்.
முதலில்..

”உள்ளக்குடியிருப்பை
சரி செய்வோம்”

வசந்த வாசல்
அ.சலீம் பாஷா துபாய்,அமீரகம்.
www.vasanthavaasal.blogspot.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button