கவிதைகள் (All)
“கடலும்; படகும்”
இவ்வுல கென்பது இன்பக் கடலானால்
எவ்வாறு நீயு மினிதேக் கரைசேர்வாய்?
எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால்
அச்சமின்றி செல்லும் பயணம்
படகு சிறிதாய் பழுதாகிப் போனால்
கடலில் முழுதும் கவிழ்தலைப் போலவே
பாவம் நிரம்பியதால் பாரெங்கும் தண்டனை
கோபப்பட் டென்ன பயன்?
கடனட்டை யென்னும் கடலில் மூழ்கி
உடன்கட்டை வேகவொரு போதும் நினைக்காதே
சிக்கன மென்னும் சிறந்த படகேற
இக்கணம் தேவை தீர்வு
-“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499