கவிதைகள் (All)

நான் மட்டும் தனியாக..

பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக!

கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்தம்பியோ தேம்பி அழுதான்!
அடிக்கடி அடிக்கும்அக்காவோ முத்தமிட்டால்;நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டதுபாசம் எனை வென்றது;

தடுக்க முடியாமல்தாரைத் தாரையாககண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய நண்பர்களோ கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போதுநான் மட்டும் தனியாகஎன்னைப் போல் இருப்பவர்கள்இங்கே துணையாக!

வருமானத்திற்காகவளைகுடாவில் செரிமாணமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
  
A.R. Mohamed Sadiq
VawaladiMob: 050-1570067 ( U.A.E )
E-mail : armohamedsadiq@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button