கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட
கருவுடன் எண்ணமாய் வார்க்கும்
அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும்
அனைத்திலும் கற்பனைப் பூக்கும்
நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்
நம்பியேத் துணிவுடன் செல்லும்
பற்பல கடமை யாவுமே எண்ணப்
பயனென உறுதியாய்ச் சொல்லும்
கனவெனும் கணவன் மனமெனும் மனைவிக்
கலந்திடும் போழ்தினில் “எண்ணம்”
நனவெனும் வாழ்வுத் தொட்டிலில் உதிக்கும்
நல்லதோர் சிசுவினின் வண்ணம்
தினமுமே யுண்ணு முணவிலும் நேர்த்தித்
தெரிவுட னுடுத்திடு முடையும்
மனதினில் தோன்றும் கற்பனைக் கூற்றின்
மறுபுறக் காட்சியின் விடையாம்
யாப்பிலக்கணம்: எழுசீர் விருத்தம்
விளம், மா, விளம், மா
விளம், விளம், மா
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
அலை பேசி: 00971-50-8351499