முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க கூட்டம் !
அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குப் பாராட்டு !!
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செயற்குழுக்கூட்டம் 01.02.2011 செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் சங்க அலுவலுகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் எஸ். முஹம்மது இக்பால் தலைமை வகித்தார். துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது முன்னிலை வகித்தார்.
சங்க நூலகம் குறித்த விளக்கவுரையினை வழக்கறிஞர் அப்துல் சமது வழங்கினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அமீரகம் பயணம் குறித்தும், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் நமதூருக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்தும் விவரித்தார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஜமாஅத் மற்றும் சங்கத்தின் பணிகளுக்கு அமீரக ஜமாஅத் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். மேலும் நூலகப் பணிகள் விரிவடைய உதவிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முதுகுளத்தூர் பெண்கள் தொழுகை மஜ்லிஸ் கட்டுமானப் பணிக்கு உதவிட வாக்குறுதியளித்திட்ட ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பணிக்கு உதவிட்ட தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத்திற்கும் நன்றி தெரிக்கப்பட்டது. கட்டிடக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.
கணக்கர் இ. பிச்சைக்கனி நன்றி கூற தக்பீர் முழக்கத்துக்குப் பின்னர் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் உதவித்தலைவர் எம்.எம்.கே.எம். காதர் முகைதீன், செயலாளர் அஷ்ரப் அலி, உதவிச் செயலாளர் நசீர்கான், பொருளாளர் கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சாயபு, எம். செய்யது அப்தாஹிர், கே. அஹமது இப்ராஹிம், ஜாஹிர் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.