கரோனரி ஆஞ்ஜியோகிராம்
மனிதனுக்கு உயிர்வாழ இதயத்துடிப்பு தேவை. இதயம் துடிக்கச் சக்தி தேவை; இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த சக்தி, இதயத் தின் இடது கீழறையிலிருந்து வெளியேறி, அயோட்டா என்ற மகா தமனி மூலம் வெளியேற்றப்படுகிறது. அப்போது, அயோட்டா ஆரம்ப பகுதியிலுள்ள கரோனரி சைனஸ் என்ற பகுதியிலிருந்து ஆரம்பமாகும் மூன்று கரோனரி ரத்தக்குழாய்கள் மூலம் இதயம், வேண்டிய ரத்தத்தை பெறுகிறது.
இதயத்துடிப்பு
இதயம் துடித்து, அதன் வேலையை செய்ய, அதாவது இடது அறையிலிருந்து ஐந்து லிட்டர் ரத்தம் நிமிடத்திற்கு வெளியேற்றப்படுகிறது. இந்த துடிப்புக்கு ரத்தம் தேவை. இந்த ரத்த ஓட்டம் குறைந்தாலோ? நின்றாலோ? வேதனையும், துயரமும் தான் வரும். சோதனைக் காலம் துவங்கி விட்டது.
மாரடைப்பு, திடீர் மரணம் என்று மனிதனை அழித்து விடுகிறது. இதனால், 25 வயது முதல் 60 வரை, குடும்பத் தலைவன் உயிர் எவ்வளவு முக்கியத் தேவை. குடும்பத்தின் வாழ்வாதாரமே, அந்த வருவாய் ஈட்டும் ஜீவனால் தானே. அப்படிப்பட்ட இளம், நடுத்தர, மேல் வயது குடும்பத் தலைவர்களை காப்பாற்றி, அந்த குடும்பத்தை சோதனையிலும், துயரத்திலும், துன்பத்திலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு, இதய நோய் நிபுணருக்குள்ளது. குடும்பத் தலைவனின் நலனில், அவளுடைய மனைவி, மக்கள் நாட்டம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர் வருமானம் தான் தங்களை காப்பாற்றுகிறது என்ற நினைவு இருக்கட்டும்.
உயிர் வாழ துடிப்பு
அரசியல்வாதிகள், தனது உடலை மாதம் மாதம் பரிசோதித்து, இதயத்தைப் பாதுகாக் கின் றனர். தான் லஞ்ச ஊழலில் கொள்ளையடித்தப் பணத்தை அனுபவிக்க சர்க்கரை, ரத்த கொதிப்புடன் போராடி உயிர் வாழ துடிக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவன், குடும்ப உறுப்பினர்கள் நலத்திற்காக, வருடம் ஒருமுறையாவது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது. இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது. அதன்பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது. இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.
மவுனமான மாரடைப்பு: இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. இவைகள் செய்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.
இதை முடிவு செய்வது இதயநோய் நிபுணர் அல்லது அவர் ஆலோசனையில் சேர்ந்து, அவரது ஆலோசனைப்படி மருத்துவம் பார்க்க வேண்டும். காரணம், தேவையில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுபவமில்லாத மருத்துவர்கள் சேர்க்கப்பட்டால், பணம் விரயம், நல்ல மருத்துவ சேவையும் கிடைக்காது. இதயநோய் நிபுணர், குறிப்பாக, ஊருருவல் வல்லுனர்களால் மாரடைப்பு, மார்பு வலிக்கு காரணமான கரோனரி குழாய் அடைப்பை சரி செய்ய இவர்களால் தான் முடியும். அதாவது, முழுமையான சிகிச்சை கொடுக்க முடியும்.
மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லையென்றால், தேவையில்லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என்று பல ஆயிரம் செலவழிக்க வேண்டி வரும். அடைப்புக்கு காரணமான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.
வேறுபாடு என்ன?
ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழாய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி கண்டறியலாம். அனுமானமாக அடைப்பை காட்டும்.
எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.
கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம்.
மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.
யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச்சை (ICC)
1) மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை.
2) மூச்சுத் திணறல், இதய பம்பிங் குறைவினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.
3) படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.
4) மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.
5) ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைதல்.
மேற்கூறியவைகள் தான் முக்கிய ஐ.சி.யு., அனுமதிக்கு காரணமாகிறது. இந்நிலையில், நல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும். சில நேரங்களில், மேற்கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரைக் காப்பாற்ற ரெய்டு (Rescue Angyogram plasty) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும்.
அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்பவர், அதிக எடை உள்ளவர்கள்.
ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்புள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.
இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதினர்.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலைவர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண்டறிய வேண்டும்
திடீர் மரணம்
குடும்பத்தினரை வேதனையும், சோதனையுமாக்கி, குடும்பத்தினர் மீது கல்லை போடுவதற்கு சமம். தினம் தினம் பொய் பேசி, மனைவிகளுக்கு பிள்ளைகளின் நலத்திற்காக தனது இதயத்தை மாதா மாதம் பரிசோதனை செய்து, மக்கள் தலையில் கல்லைப் போட்டு கொடுமைப்படுத்துகிற அரசியல்வாதிகளை பார்த்தாவது நடுத்தர மக்கள், குறிப்பாக உணரப் பட்டவர்களே இந்த பரிசோதனைகள் செய்து, மாரடைப்பு திடீர் மரணத்தை தடுக்க பாருங்கள்.
யோக, தியானம், நடைபயிற்சி, தனிமனித ஒழுக்கம், உணவு ஒழுக்கம், இவைகள் இருந்தால் இதய நோயை தடுக்கலாம். இனிய தமிழ் மக்களுக்கு வரும் விரோத புத்தாண்டில், நலமுடன் வாழ, உங்களுடன் மறைந்து தாக்கும் ரத்த விரோதியான, மாரடைப்பு மரணத்தை தடுத்து வாழ எனது வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்.
மக்கள் கவனத்திற்கு ஆலோசனைகள்
கடந்த 40 ஆண்டுகால, அரிய பல முன்னேற்றங்கள் கொண்ட துறை இதயநோய் துறை. காரணம், திடீர் மரணம் என்ற பயம். இ.சி.ஜி., எக்கோவில் ஆரம்பித்த பரிசோதனைகள் இன்று டி.எம்.டி., எக்கோ, லிபிட் ப்ரொபைல், கரோனரி ஆஞ்ஜியோகிராம், பை-பாஸ் சர்ஜரி ப்ரோபைல் இதய மாற்று ஆபரேஷன், 64, 120 சிலைஸ் ஆஞ்சியோ இதய நியூக்ளியர் பரிசோதனை தானியம் ஸ்டெசி எலக்லோ பிசியலாஸ்கள் பரிசோதனை என்று வளர்ந்து, மாரடைப் புக்கு பை-பாஸ் சர்ஜரிக்கு பதிலாக இன்று இரண்டு மூன்று ஸ்டென்ட் சிகிச்சை முறை பரவலாகி விட்டது. இந்த சிகிச்சை, பல ஸ்டென்ட் சிகிச்சை செய்ய பல லட்சங்கள். இதை கடன் வாங்கி, நகைகள், வீடு விற்று, ஏழைகள், நடுத்தர மக்கள் செய்ய வரும்போது வேதனை அளிக்கிறது. இவ்வளவு பணமும் ஸ்டென் கம்பெனி, மருத்துவமனைக்கு செல்கிறது. இதனால், இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்வதை நிறுத்தலாமா என்று தோன்றுகிறது. தனிமனித ஒழுக்கம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி தியானம், யோகா, சுத்தமான சிந்தனை. இவைகள் இதய நோயைத் தடுக்கும்.
பேராசிரியர் டாக்டர். அர்த்தநாரி