விளம் மா தேமா என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம்
உறைவிடம் உணவு தந்து
உடுத்திட உடையும் தந்த
இறைவனை மறந்து நீயும்
இருத்தலின் வியப்புக் கண்டேன்
மறைவுட னிருந்தே காத்து
மறைதனில் விளக்கம் காட்டும்;
குறைகளி லிருந்து நீங்கும்;
குயவனை மறுத்தல் கண்டேன்!!
திரைகடல் புயலில் சிக்கித்
திணறிய பொழுது நாமே
விரைவுடன் விளித்துக் கேட்டால்
வியந்திடு மருளால் காப்பான்
கரைதனை அடைந்த நாமே
கடவுளை மறந்து விட்டால்
வரைமுறை கடந்த தீமை
வலைதனில் விழுந்த பாவி
பொருளினை வழங்கிப் பார்த்தும்;
பொழுதினி லழித்துப் பார்த்தும்;
அருளினை அழகாய்த் தந்தும்;
அழுகிட இறப்பு தந்தும்;
கருவினில் குழந்தை தந்தும்;
கடலினா லழிவை தந்தும்
ஒருவனாய் இயங்கும் சக்தி
ஒருமுறை வியந்து போற்று
”கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/