ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்

கட்டுரைகள்

ஆசிரியர்:  கலாநிதி யூசுப் அல் கர்ளாவி
தமிழில்: அஷ்ஷெய்க் பீ.எம்.எம். இர்பான்

நூல் மதிப்புரை : அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். இத்ரீஸ்

இஸ்லாத்தின் தோற்றம் முதல் அல்குர்ஆனைப் போல் நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவை அதிகாரபூர்வமானதோர் அடிப்படை மூலாதாரமாகக் கொள்வது மார்க்கக் கடமையாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. ஸலபுகளில் எவரும் இவ்விடயத்தில் முரண்பாடான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் ஸுன்னாவின் அதிகாரத் தன்மை குறித்த வாத விவாதங்கள் எழலாயின.
கலாநிதி தாஹா ஜாபிர் குறிப்பிடுவது போல குறையறிவு படைத்த சிலர் ரஸூல் (ஸல்) அவர்களிடமிருந்து திட்டவட்டமாக அல்லது தெளிவாக வந்த ஸுன்னாவுக்கும் முன்னைய சமூகங்களின் வாழ்வியல் பற்றிய செய்திகளுக்குமிடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். முன்னோர் தொடர்பான ரிவாயத்துக்களை ஆதாரமாகக் கொள்ள முடியுமா? ஆதாரமாகக் கொள்வதாயின் எந்தளவு ஏற்க முடியும். மனித அறிவுக் கருவிகளின் மத்தியில் அவற்றின் இடம் என்ன? புலனுண்மைகளுக்கு முரணாக அவை அமையுமாயின் அவற்றால் தாக்குப் பிடிக்க முடியுமா? என்பன போன்ற அம்சங்களை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அன்றைய கிரே க்க மெய்யியல் சார்ந்த சர்ச்சைகள் அனைத்தையும் ஸுன்னாவிற்குள் இழுத்து வந்துவிட்டனர் என்று கூறுகிறார். நம்நாட்டில்கூட சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இதன் எதிரொலியைக் கேட்க முடிந்தது.
சென்ற நூற்றாண்டுக்கு முன்பிருந்து ஏற்பட்டு வருகின்ற இஸ்லாமிய எழுச்சியாலும் இஸ்லாமிய அறிவுஜீவிகளும் களப்பணியாளர்களும் பல்வேறு சவால்களுக்கு போல் ஸுன்னாவைப் இரண்டு முக்கியமான சவால்களை எதிர்கொண்டனர்.
1. ஸுன்னாவின் அதிகாரபூர்வத் தன்மையை நிறுவுதல்.
2. ஸுன்னாவின் அணுகுமுறையை விளக்குதல்.
‘ஸுன்னாவின் அதிகாரபூர்வத் தன்மையை நிறுவும் முயற்சியில் பல இஸ்லாமிய அறிவுஜீவிகள் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளனர். கலாநிதி அப்துர் ரஹ்மான் அப்துல் ஹாலிக் ஹுஜ்ஜியதுஸ் ஸுன்னா’ என்ற பெயரில் மிகப் பெரும் ஆய்வை செய்துள்ளார்.
கலாநிதி அஸ் ஸிபாஈ ‘அஸ்ஸுன்னா வமகானதுஹா பித்தஸ்ரீஇல் இஸ்லாமி’ என்ற நூலை கீழைத் தேயவாத ஐயங்களை வகையில் எழுதியுள்ளார்.

ajmzaneer@sltnet.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *