கீழக்கரை அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

கீழக்கரை அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைமை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் கமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள், திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ், கீழக்கரை நகர் செயலாளர் முகமது ஜலாலுதீன் மற்றும் நிர்வாகிகள், இராமேஸ்வரம் நகர் செயலாளர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள், மண்டபம் ஒன்றிய செயலாளர் ரெய்மண்ட் மற்றும் நிர்வாகிகள், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள், இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சங்கீதா மற்றும் நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஞ்சன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தளபதி தமீம் & நிர்வாகிகள், மாவட்ட கொள்கைபரப்பு அணி அமைப்பாளர் பரத் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சுற்றுசூழல் அணி திருமதி விமலா & நிர்வாகிகள், மண்டபம் பேரூர் செயலாளர் பிரதீபன் & நிர்வாகிகள், RS மங்களம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் & நிர்வாகிகள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கார்த்திக் & நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.