இளையான்குடி : தமிழ் இலக்கிய மன்ற விழா

தமிழ் இலக்கிய மன்ற விழா

இளையான்குடி :
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி சுயநிதி முதுகலைத் தமிழ்த்துறை சார்பாக 09.04.2025 அன்று தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. துறைத்தலைவர் சேவியர் ராணி வரவேற்றார்.
கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் சோனைமுத்து அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக சிவகங்கை, தொல்நடைக்குழு நிறுவனர் மற்றும் வட்டார வள மையம், ஆசிரியர் பயிற்றுநர், புலவர் காளிராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பல்கலைக்கழக தேர்வுகளில் ரேங்க் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.
இறுதியாக கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் சசிகலா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறை பேராசிரியைகள் கதிஜா பீவி மற்றும் பைசு நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.