இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் :

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமக்குடியில் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்.கே ராஜன்,
கே ஆர் சுப்பிரமணியன், மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி செல்வராஜ்,
டி எம் சிவக்குமார், எம் பி ருக்மாங்கதன், விஜயபாஸ்கர் கே ஜி நாகநாதன், ஹரிகரன்,
எம் கோட்டைச்சாமி, வி ஆர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம் நகர் குழு சார்பில் நகர செயலாளர் சி ஆர் செந்தில் வேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், எஸ் முருகானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் கிளை நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் தாலுகா கமிட்டி சார்பில் முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் எஸ் எம் ஜெயசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
திருப்புல்லாணி ஒன்றியம் பெரிய பட்டிணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
இந்திய அரசியலமைப்புக்கு எதிராக முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தும் வகையில் அவர்களது இறையாண்மைக்கும் எதிராக வக்பு வாரிய சட்ட திருத்தத்தை இயற்றிய மோடி அரசைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரிய பட்டிணத்தில். ஓன்றியச் செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களின் மத விவாகரங்களில் தலையிடக்கூடாது என்கிற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
ஜலால் ஜமால் ஜும்மா பள்ளி தலைவர் மீராசா. திருப்புல்லாணி மூத்த தோழர்கள் அரகாச் மற்றும் தருஸ்கான் பஹருதீன். முன்னாள் பிரசிடெண்ட் ஜே. அப்துல் ரஹீம். ஜே. ஷர்புதீன். . முன்னாள் ஒன்றிய செயலாளர் பாரூக். வண்ணாங் குண்டு கிளைச் செயலாளர் ஆறுமுகம். கிளைச் செயலாளர் மாணிக்கம். பெரியபட்டினம் இளைஞரணி செயலாளர் ரிபாய்க்கான். கபீர். நாகு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்