இராமநாதபுரம்
ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா

ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா

கீழக்கரை; ஏப் 12-
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மழலையர் பட்டமளிப்பு விழா ஏப்12அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு எலைட் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். பொருளாளர் சையது அப்பாஸ் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முதல்வர் வசந்தி வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஜேக்கப் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பின்பு சிறப்புரையாற்றினார் .பின்பு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இறுதியாக உதவி முதல்வர் நன்றி கூறினார்.