ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் மக்கள்திரள் கண்டன ஆர்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் மக்கள்திரள் கண்டன ஆர்பாட்டம்

ஏப்ரல் 11: இராமநாதபுரம், முதுகுளத்தூர் நகர் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக இந்திய முஸ்லீம்களின் வக்ப் சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் ஒன்றிய அரசை
கண்டித்து மாபெரும் மக்கள்திரள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,
இதில்
ஹாஜி காதர் முஹைதீன் அவர்கள், தலைவர் பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர் அவர்கள் தலைமையில், முதுகுளத்தூர் அனைத்துஜமாஅத் நிர்வாகிகள், முதுகுளத்தூர் அனைத்து சங்க நிர்வாகிகள், முதுகுளத்தூர் வட்டார ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், முதுகுளத்தூர் நகர் அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாய அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில், தலைமை இமாம் பசீர் சேட் ஆலிம் பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர், கிராத் ஓதி ஆரம்பம் செய்ய,
ஹிம்மதுல்
இஸ்லாம் வாலிபர் சங்கத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,
மொளவி, ஹாபில் A. முஹமத் சிராஜுதீன் மஹ்லரி, ஹஜ்ரத் அவர்கள், இமாம் திடல்
பள்ளிவாசல் முதுகுளத்தூர், மற்றும் மொளவி, ஹாபில் N.சவ்கத் அலி மிஸ்பாஹி,
ஹஜ்ரத் அவர்கள், (இமாம் பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர்) ஆகியோர் கண்டன
உரையாற்ற , ஐக்கிய ஜமாத்நிர்வாகிகள் மற்றும் ஷரியத்துள் இஸ்லாம் சன்மார்க்க
சங்க நிர்வாகிகள் கண்டன கோசம் எழுப்ப, திடல் பள்ளிவாசல் தலைவர்,
ஜபருல்லாகான் அவர்கள் நன்றிஉரை ஆற்றினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹிம்மதுல்
இஸ்லாம் வாலிபர் சங்கம், ஷரியத்துள் இஸ்லாம் சன்மார்க்க சங்க
உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஜமாத் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசை கண்டித்து
கண்டனம் தெரிவித்தனர்.

