காவேரி கூட்டுக்குடிநீர் வீணாகும் அவலம் கண்டுகொள்ளாத நிர்வாகம்

காவேரி கூட்டுக்குடிநீர் வீணாகும் அவலம் கண்டுகொள்ளாத நிர்வாகம்

முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் எதிரே பரமக்குடி செல்லும் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்ட காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வீணாக அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்த தகவல் நாளிதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை. தற்போது கடும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது பொது மக்களுக்கு தண்ணீர் தேவையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பை காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட செயல் அதிகாரிகள் உடனே சரிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.