இராமநாதபுரம்
கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்

கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்

கடலாடி :
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு பேரையூர் அருகே செயல்படும் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் மற்றும் அனுபவ பயிற்சியின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், இதர பேராசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஊர் பொது மக்களுக்கு மழைநீர் சேமிப்பின் அவசியத்தையும் அதன் பயன்பாட்டையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.