முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் பைப் லைன் அமைக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் பைப் லைன் அமைக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் மத்திய அரசு திட்டமான ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு பைப் லைன் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. பைப் லைன் அமைப்பதற்கு தெருக்களில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டது, பைப் லைன் அமைக்கும் பணி நிறைவடைந்தும் இதனால் வரை தெருக்களில் உள்ள சாலைகள் சீர் செய்யப்படாமல் கற்கள் சிதறிய நிலையில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் சாலை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்,இது பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் மத்திய அரசு திட்டமான ஜல் ஜீவன் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது இதற்கு தெருக்களில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டது பைப் லைன் அமைக்கும் பணி நிறைவடைந்ததும் இந்நாள் வரை சாலைகள் சீரமைப்பு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் முதியோர்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உருவாகி மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வாகனங்கள் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு வர முடியாமல் பாதி வழியில் திரும்பி செல்லும் நிலை உள்ளது சில பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லாமல் இரவு நேரத்தில் தெருக்களை பொதுமக்கள் கடந்து செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்,ஆகவே ஜல் ஜீவன் திட்டத்திற்கு தோண்டப்பட்ட தெருக்களில் உள்ள சாலைகளை
முறையாக சீரமைத்து புதிய சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.