கவிதைகள் (All)
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
அமைதி மார்க்கம் என்று
அகிலமெல்லாம் அறியும்
அல்லாஹ்வின் மதம் சார்ந்து
அண்ணல் நபி வழிநடந்து
புனிதமான ரமலான் மாதத்தில்
புனிதமாக நோன்பிருந்து
புனித குரான் ஓதியே
புனிதமாக தொழுகை செய்து
புனிதமான மனத்துடன்
புனிதமான அறம் வளர்த்து
மனித நேயம் காட்டிடும்
புனித இஸ்லாமியர் அனைவருக்கும்
புனித ரமலான் வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லா இன்பமாய் வாழ்க.
மாஷா அல்லா மாண்புடன் வாழ்க.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
31.03.2025