பேராசிரியர் எம் எச்ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வெளியிடும் ரமலான் வாழ்த்துச்செய்தி!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச்
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
வெளியிடும் ரமலான் வாழ்த்துச்
செய்தி!
நோன்பு காலத்தில் பசித்திருத்தல்
தனித்திருத்தல் போன்ற ஆன்மீக பயிற்சிகளை மேற்கொண்ட
அனைவரும் ஆண்டு முழுவதும்
நடைமுறைப்படுத்துவோம்.
மனிதக் குலத்திற்கு வழிகாட்டியாகத்திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்
படி உடல் தூய்மை உள்ளத் தூய்மை இரண்டையும் பேணி ஈகையினை சிறப்பாக வழங்கி மகிழ்கிறோம்.
திருக்குர்ஆன் இந்த பூவுலகிற்கு
அருளப்பட்ட புனித மாதத்தில் செய்திட்ட நிறைவான நன்மைகளை
தொடர்ந்திடுவோம்.
இந்த சிறப்புமிக்க நன்னாளில்
சமத்துவம் தழைக்கவும் சகோதரத்துவம் நீடித்து நிலைக்கவும்
சமூக நல்லிணக்கம் செழிக்கவும்
சமூக ஒற்றுமை மேம்படவும்
அனைவரும் உறுதி ஏற்போம்.
உலகம் முழுவதும் அநீதிகள்
அழிந்து சமத்துவம் நிலை பெற
இறைவன் அருள்புரிவானாக.
ஈதுல் பித்ர் எனும் இந்த ஈகைப் பெருநாளைக் கொண்டாடி மகிழும்
வண்ணம் இஸ்லாமியச் சொந்தங்கள்அனைவருக்கும்
மனமார்ந்த பெருநாள்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அன்புடன்.
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.