அறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஆரம்பகால பயிற்சி மையத்தின் ஆண்டு விழா

அறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஆரம்பகால பயிற்சி மையத்தின் ஆண்டு விழா

ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள விஜய் ஹியூமன் சர்வீசஸ் அமைப்பின் சார்பில் அரசு உதவி பெறும் அறிஅறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய (மாற்றுத்திறன்) குழந்தைகளுக்கான பயிற்சி மையம் கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இங்கு பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி செயல்வழி கற்றல், பேச்சு பயிற்சி, நடை பயிற்சி தசைப் பயிற்சி. அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை திறன் மதிப்பீட்டு செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிமைய ஆண்டு விழா நிர்வாகி ஜானகி பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் ஜெயக்குமார் ரெட்டி, முன்னிலை வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் ஆனந்தம் சில்க்ஸ் இயக்குனர் கணேஷ் பாபு, மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பங்கேற்று பள்ளியின் சிறப்பு பற்றி பேசினர். பள்ளி முதல்வர் கலுஜா வரவேற்றர். விழாவில் டாக்டர் ஜெயக்குமார் ரெட்டி பேசியதாவது:- சென்னையை சேர்ந்த பிரபல உளவியல் துறை பேராசிரியர் ஜெயச்சந்திரன், அறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் கற்றல் பாதிப்புள்ள மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவரது முயற்சியால் ஏராளமான பயிற்சியாளர்களும், பல்வேறு சிறப்பு பள்ளிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரத்தில் அரசு உதவியுடன் இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு தனியாக இடம் ஒதுக்கி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்விழாவில் அறங்காவலர் வெங்கடேஷ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் ராமலக்ஷ்மி, பயிற்சிப் பள்ளி ஆசிரியர் ஜெயசுதா, கற்பகம், காளியம்மாள், உமா மகேஸ்வரி மற்றும் சிறப்பு பள்ளியின் குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்