இராமநாதபுரம்
இலவச மருத்துவ முகாம்

கமுதி அருகே இராமசாமிபட்டியில் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் மாணவ, மாணவிகள், அரசு தொடக்கப்பள்ளியில் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாம் நடத்தினர். இதில்
இராமசாமிபட்டி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் நிஹார் அஞ்சும் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு
ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முதியவர்கள் அனைவரும் சிகிச்சை அளித்தார்கள், பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள், மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது .
பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.