பெருநாள் புத்தாடை வழங்கப்பட்டது

வெளிநாடு வாழ் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முகைதீன் பள்ளிவாசல் மதரஸா குழந்தைகளுக்கு அவர்களின் மார்க்க கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பெருநாள் புத்தாடை மற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மீனாட்சிபுரம் பகுதி மக்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டத.

இந்த சங்கை மிகு நிகழ்வில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஹாஜி MMKM காதர் முகைதீன், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அஹமது பசீர் சேட் ஆலிம், முன்னாள் ஜமாத் தலைவர் ஜனாப் இக்பால், திடல் ஜமாத் தலைவர் ஜபருல்லாஹ்,UMMJ டிரஸ்டி ஜனாப் ஜஹுபர் அலி,ஜனாப் ஹபிபுல்லா, பொருளாளர் அஹமது கபீர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத் தலைவர் அப்துல் அஜிஸ், பொருளாளர் அசன் தீன், துணைச் செயலாளர் முஷ்ரப் மற்றும் கல்வி குழு பொருளாளர் ஷேக் ஜமீல் அகமது ஆகியோர் நிகழ்வை கலந்து கொண்டு சிறப்பித்தனர்