இராமநாதபுரம் : போதை ஒழிப்பு – ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

இராமநாதபுரம் :

இராமநாதபுர மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, போதை ஒழிப்பு தொடர்பாக ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் மு.ஹாஜா முகைதீன் வரவேற்றார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.சின்னராசு தலைமையுரையாற்றினார். போதை ஒழிப்பு மன்றத்தின் செயல்பாட்டு முகவுரையை, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வாசித்தார்.மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் சஞ்சய் பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ந.சிவகுமார், பசுமை முதன்மையாளர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பொருளாதார குற்றப்பிரிவு சுபாஷ் சீனிவாசன், மனநல மருத்துவர் அசோக், கேணிக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் சாலமன் அப்பாத்துரை ஆகியோர் போதையால் ஏற்படும் குடும்ப, சமூகக் கேடுகள் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
முகாமில் போதை ஒழிப்புக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்த் நன்றி கூறினார்.