ராமேஸ்வரம் காவல்துறை அராஜக போக்கை கண்டித்து தொடரும் போராட்டம்

ராமேஸ்வரம் காவல்துறை அராஜக போக்கை கண்டித்து தொடரும் போராட்டம்

ராமேஸ்வரம், 26 மார்ச் 2025: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி கும்பல் ராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர்களை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல், பதிலாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களே காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பாக, “கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், தாக்குதல் நடத்திய ஆந்திர ரவுடி கும்பலை கைது செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் இணைந்து இன்று 26.3.2025 மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை காவல்துறை சீர்குலைக்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து, ராமேஸ்வரம் மக்கள் மற்றும் அனைத்து கட்சி போராட்டம் தொடரும்
காவல்துறையின் அதிகார அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
காவல்துறையின் ஆதரவில் செயல்பட்ட ஆந்திர ரவுடிகளை கைது செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.ஆர்.செந்தில்வேல்