இராமநாதபுரம்

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

இராமநாதபுரம் :

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் பொருளாளர் ஹாஜாமுகைதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் பாரதி நகர் தனியார் மகாலில் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் கண்ணன், அரசு ஊழியர் அணி மாநில துணை செயலாளர் மகாதேவன், பேரிடர் மீட்பு அணி மாநில துணை செயலாளர் சாமி அய்யா, மாவட்ட துணை செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை புகாரியா பள்ளிவாசல் அல்ஹாஜ் அக்பர் ஆலிம் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி, மதிமுக மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை செல்வி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், சாத்தான்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் சர்மிளா பர்வீன், மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் சோமசுந்தரம், உச்சிப்புளி ஜெயகாந்தன், சாத்தான்குளம் , வாலாந்தரவை ஜமாஅத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட , நகர, ஒன்றிய, நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் முன்னதாக வரவேற்றனர். மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button