இராமநாதபுரம்
மாணவர்களுக்கு விருது

உலையூர் :

இராமநாதபுரம் மாவட்டம் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 14-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்பேத்கர் தலைமையில், சிறப்பு விருந்தினர் தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் முத்துசாமி மற்றும் முயல் அறக்கட்டளை தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் பத்திரப்பதிவு துறை அலுவலர் பாலு, ஐஒபி விஜிலென்ஸ் அதிகாரி சரவணன் மற்றும் பசுமை முதன்மையாளர் சுபாஷ் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
