இராமநாதபுரம்
உலக தண்ணீர் தினம்

இராமநாதபுரம் :

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் ஸ்ரீ குமரன் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிக்குமார் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் முன்னிலையில், இராமநாதபுரம் பசுமை முதன்மையாளர் சுபாஷ் சீனிவாசன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வை பள்ளியின் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தார்.
