கீழக்கரை : இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கீழக்கரை

கீழக்கரை சிவில் இன்ஜினியர்ஸ் மற்றும் ஆர்க்கிடெக்ட்ஸ் அசோசியேசன் சார்பாக இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கீழக்கரையை சார்ந்த சிவில் இன்ஜினியர்ஸ் மற்றும் ஆர்கிடெக்ட்ஸ் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் கீழக்கரையை சார்ந்த மூத்த இன்ஜினியர்களான இன்ஜினியர் மௌலானா, இன்ஜினியர் ஆசாத், இன்ஜினியர் பாய்ஸ், இன்ஜினியர் நம்பி ராஜ், இன்ஜினியர் பாலமுருகன்,ஆர்க்கிடெக்ட் அமீர் பாட்சா, ஆர்க்கிடெக்ட் Rtn.சம்சுல் கபீர், மேலும் கீழக்கரை கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் P.M.கெஜி (எ)கஜேந்திரன், அமல் டிரேடர்ஸ் சதீஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் பள்ளிக்கு அருகாமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சிறப்புடன் கீழக்கரை இன்ஜினியர்ஸ் மற்றும் ஆர்க்கிடெக்ட்ஸ் அசோசியேசனின் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடு செய்தனர்.