விழிப்புணர்வு

இராமநாதபுரம் :

தமிழக பள்ளிக்கல்வித்துறை, இராமநாதபுரம் மாவட்டம் – உலகளாவிய மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், மதிப்புமிகு.மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மாணவர்கள் பங்களிப்புடன்
பள்ளி வளாகத்தில் உள்ள மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் மன்றம் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர், திருமதி.சகாய வள்ளி முதன்மை கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.விஜயகுமார்,
பள்ளி துணை ஆய்வாளர்
திரு. ஆனந்த், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கரன் மற்றும் பசுமை முதன்மையாளரும்,
பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.