இராமநாதபுரம்
மரம் நடும் பணி

இராமநாதபுரம் :

இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு,
இராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில், பச்சை குடை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை பசுமை முதன்மையாளரும், இராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.