இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா

இராமநாதபுரம், மார்ச் 16 – இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா மற்றும் பாதுகாப்பான, ஊட்டச்சத்துமிக்க உணவு அனைத்து நுகர்வோருக்குமான அடிப்படை உரிமை கருத்தரங்கு கிரியேட் அமைப்பு சார்பில் நடந்தது.

கிரியேட் தலைவர்,
முனைவர். பி. துரைசிங்கம்
தலைமை வகித்தார். கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத் தலைவர்
மு.செய்யது இப்ராஹீம் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டலத் தலைவர் மு. மதுரைவீரன்,
கிரியேட் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர்
வே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் : நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு. இளங்கோ சிறப்புரை ஆற்றினார். உணவுத் தட்டில் அதிகரித்துவரும் கொடிய நஞ்சுகளின் எச்சங்களும், மனிதகுலம் எதிர்கொள்ளும் புதிய வகை நோய்களுக்குமான தொடர்புகள் தீர்வுகள் குறித்து இராமநாதபுரம்
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர்,
மருத்துவர். கோ. விஜயகுமார்,
கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான உணவுப் பழக்கங்கள் குறித்து
இராமநாதபுரம் குழந்தைகள் வளரச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி,
உணவுப் பொருட்களில் குறைந்து வரும் ஊட்டச்சத்துகள், காரணங்களும், தீர்வுகள் குறித்து
இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீத் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மனையியல் துறை தலைவர் (பொறுப்பு) ஏ. நிஷாத் நாஜ்னி,
பாரம்பரிய நெல் ரகங்கள் சிலவற்றில் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வில் காணப்படும் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவப் பயன்கள் குறித்து
கிரியேட் திட்ட இயக்குநர் கே. சுரேஷ் கண்ணா பேசினர்.
பள்ளி மாணவ மாணவிகள் மகளிர் அமைப்புகள் விவசாய அமைப்புகள் மகளிர் திட்ட மகளிர்கள் மற்றும் நுகர்வோர்கள் பெருமளவு கலந்து கொண்டார்கள்.
இராமநாதபுரம் நுகர்வோர் மகளிர் ஒருங்கிணைப்பாளர்,ப.லதா நன்றி கூறினார்