கீழக்கரை : உலக நுகர்வோர் தின வார விழா

கீழக்கரை :

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறையின் குடிமக்கள் நுகர்வோர் சங்கம் சார்பில் உலக நுகர்வோர் தின வார விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் நாள் (12.3.25) அன்று நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் (13.3.25 & 14.3.25) விருந்தினர் விரிவுரையும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா அவர்களின் தலைமையில் வணிகவியல் துறையின் தலைவர் முனைவர் ஏ. ஜாஸ்மின் அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.
நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மு செய்யது இப்ராஹிம் நுகர்வோர் உரிமைகள், நியாய விலைக்கடை, நுகர்வோர் நீதிமன்றங்கள் பற்றிய விழிப்புணர்வை மிக அழகான முறையில் தெளிவாக விளக்கினார்.
அவருடன் லதா நுகர்வோர் நலச்சங்கம் இராமநாதபுரம் மற்றும் திருமதி சாமுண்டீஸ்வரி வட்ட வழங்கல் அலுவலர் அவர்களும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நுகர்வோரின் கடமைகள் பற்றி எடுத்துரைத்தனர்.