இராமநாதபுரம்
மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பாட்டு வருகிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இக்கட்டிடம் 3/11/2021 ஆண்டு கட்டப்பட்டது இப்பள்ளி கட்டிடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் தற்போது பெய்த மழையில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதாக கூறி கிராம இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மாணவ மாணவிகள் கூறுகையில் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டுதரமான முறையில் கட்டித் தரவும் , மாணவ மாணவிகளின் படிப்பை உறுதி செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறினார்