கீழக்கரையில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடத்திட கோரிக்கை

கீழக்கரையில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடத்திட கோரிக்கை

கீழக்கரை :
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,மின் நுகர்வோர் தங்களின் மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பில் ஏற்படும் குறைகளை கூறி அதற்கான தெளிவு பெறவும் மின் வாரியம் தொடர்பான புகார்களை கூறவும், பொதுமக்கள் நேரடியாக குறைகளை புகார் மனுவில் அளிக்கும் போது உடனடி தீர்வு கிடைக்கவும் குறைதீர்க்கும் கூட்டம் ஏதுவாக அமையும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் கீழக்கரை பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை தினம் தோறும் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அது மட்டுமல்லாமல் நுகர்வோர் இடத்தில் மின் வாரிய அதிகாரிகள் மின் கணக்கிடும் முறை பற்றி எடுத்துரைத்தல், நுகர்வோர் மின் சட்ட விழிப்புணர்வு, மின் சிக்கனம் குறித்த வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும்
இன்றைக்கும் பலர் மின் தடை ஏற்படும் போது குறிப்பாக வெயில் காலங்களில் மின்துறை பணியாளர்களை தொடர்பு கொள்வது சிரமமாய் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
அதனை சரிசெய்யும் வகையில் மக்களுக்கு உடனடியாக மின் வாரிய ஊழியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கீழக்கரை மின் வாரிய அதிகாரி நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பதே நுகர்வோர்களின் கோரிக்கையாக உள்ளது.