முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஆர், எஸ், ராஜகண்ணப்பன் மீண்டும் போட்டி

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஆர், எஸ், ராஜகண்ணப்பன் அவர்கள் மீண்டும் போட்டி

முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள எஸ், எஸ், முனியசாமி திருமண மண்டபத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆர், எஸ், ராஜகண்ணப்பன் அவர்கள் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர், விநாயகா புளு மெட்டல் உரிமையாளர், மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
அப்போது உரையாற்றிய அமைச்சர் ஆர், எஸ், ராஜகண்ணப்பன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னேற்றம் அடையும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரையில் இடம் தேர்வு செய்த பின்பு அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் முழுமையான வளர்ச்சிக்கு இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது.
ஆகையால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் கட்சி தலைமையிடம் பேசி நான் மீண்டும் போட்டியிட முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை கேட்டுள்ளேன். ஆகையால் நான் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதற்கு முன்பு அனைத்து சமுதாய மக்களின் ஆதரவுடன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை நல்ல நிலைக்கு கொண்டுவர பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.
