பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

ராமநாதபுரம் :

லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது.
ராமநாதபுரத்தில், மத்திய அரசின் நிதிஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷனுடன்இணைந்து லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் Shell NXplorers நிகழ்ச்சியை கடந்த மாதம் நடத்தினர். இந்தப் பயிற்சியில் 24 அடல் டிங்கரிங் லேப்பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பிராப்ளம் சால்விங் திறன் மற்றும் கிரிட்டிக்கல் திங்கிங் ஆகியவை முன்னேற்றப்பட்டன. இந்தப் பயிற்சியை முடித்த பிறகு, ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, சிறந்த அறிவியல் முன்மாதிரிகளை உருவாக்கினர்.
பின்னர், மார்ச் 6 அன்று ரெஃப்ரெஷர் பயிற்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் Shell NXplorers முறையைப் பற்றி கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். இந்தப் பயிற்சியில் 22 அடல் டிங்கரிங் லேப்பள்ளிகளைச் சேர்ந்த 31 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் அறிவியல் முன்மாதிரிகளை உருவாக்கவும், கல்வி ஆண்டில் வரும் சவால்களை எதிர்கொள்ளவும் பயிற்சி பெற்றனர்.
ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் மற்றும் Shell NXplorers குழுமத்திற்கு நன்றி தெரிவித்தனர்.