திருப்புல்லாணி அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா

திருப்புல்லாணி அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா

திருப்புல்லாணி :
கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 22 ம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாகக் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பொ.பாரத்தி. கரோலின் தலைமையில் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் பயிற்றுநர் இரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது
2025-26 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் சேர்ந்திருக்கும். குழந்தைகளுக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா, உறுப்பினர் குஞ்சரம், ஊர்தலைவர் சேகர், சங்கத் தலைவர் ஜெயக் குமார், செயலர் கருப்பையா தண்டல் பாண்டி, உதவித் தலைவர் முனியாண்டி, பொருளர் கோவிந்த ராக், உறுப்பினர் கருப்பையா ஆகியோர் கல்விச் செயல்பாடுகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகருக்கு பரிசுகரும், பதக்கங்களும் வழங்கினர்.
கிருஷ்ணாபுரம், இலங்காமணி, மரைக்காயர் நகர், தோப்பு வலசை கிறவமங்களைச் சார்ந்த ஊர் நிர்வாகிகரும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியை ஷர்மிளா பேகம் தொகுத்து வழங்கினார். பள்ளி ஆசிரியை ஜெனிபர் நன்றி கூறினார் .
மாணவ மாணவிகளின் கலை. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டி பரிசுகளை தோப்புவலசை தலைவர் ஆறுமுகம் மற்றும். மரைக்காயர் நகர் தலைவர் ரவி பரிசுகளை வழங்கினர் .
