முதுகுளத்தூர் முகைதீன் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் முகைதீன் பள்ளிவாசலில் தண்ணீர் மற்றும் சிற்றுண்டி ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத்(UMMJ )
சார்பாக வழங்க அதன் தொடக்க நிகழ்வாக இன்று இஃப்தார் நிகழ்ச்சி முகைதீன் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இப்தார் நிகழ்வில் நமது பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் MMKM காதர் முகைதீன், முன்னாள் ஜமாத் தலைவர் ஜனாப் இக்பால், UMMJ டிரஸ்டி ஜனாப் அபூபக்கர், UMMJ பொருளாளர் அகமது கபிர்,ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத் தலைவர் அப்துல் அஜிஸ், துணைத் தலைவர் மீரா மற்றும் பொருளாளர் அசன்தீன் ,வர்த்தக சங்க உறுப்பினர் ஜனாப் ஜியாவூதீன். டிரஸ்ட் நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ், அப்துல் வஹாப் (நிஷா Fancy Store ) , இம்தாதுல்லாஹ், சல்மான் ரபீக் மற்றும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள், பெரிய பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க துணைச் செயலாளர் முஷ்ரப் மற்றும் இது போன்ற பல சமுதாயம் சார்ந்த நற்செயல்களை தொடர்ச்சியாக செய்ய உதவும் UMMJ தலைவர் செய்யது சுல்தான் அவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து UMMJ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலியை தருவானாக. ஆமீன்
