கீழக்கரையில் வக்பு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்

கீழக்கரை :

கீழக்கரையில் வக்பு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பாடு சங்கம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அதன் தலைமையில் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்தும் , வக்ஃபு சொத்தினை அபகரிக்க துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத் பெருமக்கள், சமுதாய அமைப்புகள், சங்கம்,அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாபெரும் வக்ஃபு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு பொதுக்கூட்ட குழு தலைவர் முகமது ஃபரூஸ் தலைமை தாங்கினார். கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு தலைவர் ஷேக் பசீர் அஹமத் துணைத் தலைவர் முகமது அஜிஹர் மற்றும் முகமது ஜுபைர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபி கட்சியின் நகர் தலைவர் முஹம்மது ஜலீம் தொகுப்புரை வழங்கினார். கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளர் சப்ராஸ் நவாஸ் வரவேற்புரை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது ,வக்பு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலாவுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் நெய்னா முகம்மது , எஸ்டிபிஐ கட்சியின் நகர் இணைச்செயலாளர் ஹமீது பைசல் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் துணைச் செயலாளர் பெளசுல் அமீன்,
திமுக நகர் துணைச் செயலாளர் ஜெய்னுதீன் ஆகியோர் கருத்துறை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினர் பொதுக்கூட்டத்தில் ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது
வக்ஃப் கண்டன பொதுக்கூட்டதின் பின்வரும் தீர்மானங்கள்
ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்து சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்க துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பழைய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துள்ளனர்
ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ததற்கு, தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுக்கூட்டம் வாயிலாக கோரிக்கை வைத்தனர்
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை மற்றும் தமிழக அரசிற்கு தர வேண்டிய கல்வி தொகைகளை ரத்து செய்த, ஒன்றிய அரசை வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக கல்வி உதவி தொகைகளை வழங்க வேண்டும் என்று இந்த பொதுக்கூட்டம் மூலம் கேட்டு கொண்டனர்
தமிழகத்தில் தற்போது உள்ள இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி தர பொதுக்கூட்டம் மூலம் கோரிக்கை வைத்தனர்
*இந்த பொதுக்கூட்டம் வாயிலாக, வக்ஃபு திருத்த சட்ட மசோதா கொண்டு வரும், ஒன்றிய அரசை கண்டித்து மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரான மக்கள் ஆதரவை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சியினர் சங்கங்களின் நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.