இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் : நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

முதுகுளத்தூர் :

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மருதகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் பாண்டிமாதேவி தலைமையேற்று சிறப்பித்தார். இந்த சிறப்பு முகாமிற்கு தர்மர் கிராம தலைவர், குமரகுரு முன்னாள் கிராம தலைவர்,கோபால கிருஷ்ணன் ,பெரியசாமி, வெங்கட சுப்பிரமணியம்,சந்திரன், மயில் வாசகம் முன்னிலை வகித்தார்கள் பேராசிரியர் முனைவர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்கள்,நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நிர்மல் குமார், நாகராஜ் சிறப்பு முகாமினை வழிநடத்திச் சென்றார்கள் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,மாணவியர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.