இராமநாதபுரம்
நாட்டு நலப்பணித் திட்டம்

கீழக்கரை :

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஏர்வாடி கிராமம் ஐந்து நாள் சிறப்பு முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா தலைமையில் நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மு.செய்யது இப்ராஹிம் தலைவர் நுகர்வோர் உரிமைகள் கலப்படம் மற்றும் அயோடின் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வை மிக அழகான முறையில் தெளிவாக எடுத்து விளக்கினார். பொதுமக்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு தாளேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்
திட்ட அலுவலர்கள்
முனைவர் கோ ஹேமா பூஜவல்லி, சரவணப் பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
