தகவல் தொழில்நுட்ப திருவிழா

தகவல் தொழில்நுட்ப திருவிழா
இளையான்குடி :

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக 18.02.2025 அன்று கணிப்பொறி தொழில்நுட்ப திருவிழா என்னும் தலைப்பில் கணிப்பொறி அறிவியல் போட்டிகள் நடைபெற்றது. துறை ஒருங்கிணைப்பாளர் கலீல் அஹமது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். துறைத்தலைவர் சேக் தாவூத் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, அமெரிக்கன் கல்லூரி, மேனாள் செயலாளர் மற்றும் முதல்வர், சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். குறும்படம் தயாரித்தல், லோகோ தயாரித்தல், கணினி பிழை திருத்தல், இணைய பக்கம் வடிவமைத்தல், வினாடி-வினா மற்றும் மௌனமாக நடித்து காட்டல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவியற்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 10 கல்லூரிகளை சார்ந்த 138 மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். உதவிபேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.துறைப் பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.
