இராமநாதபுரம்
கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் எலுமிச்சை விவசாயிகளுக்கு பயிற்சி

கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் எலுமிச்சை விவசாயிகளுக்கு பயிற்சி

கமுதி :
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிபடையில் மாணவிகள் காவடிப்பட்டி கிராமத்தில் எலுமிச்சை விவசாயிகளை சந்தித்து அங்கு பொதுவாக காணப்படும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து கேட்டறிந்தார்கள்
பின்பு எலுமிச்சை மரத்தில் பூச்சி மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் காவடிப்பட்டி கிராம விவசாயிகள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து பயிற்சி பெற்றனர்.