இராமநாதபுரம்
கடலாடி அருகே கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

கடலாடி அருகே கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
கடலாடி :

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் அல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு, துரித உணவின் அபாயத்தைப் பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் இவ்வாறான விழிப்புணர்வை அளித்தனர்.
மேலும் பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தையும், பனை மரத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விவரங்களை கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர். இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.